ஏலச்சீட்டு நடத்தி ரூ.39 லட்சம் மோசடி
உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீ்ட்டு நடத்தி ரூ.39 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
ரூ.39 லட்சம் மோசடி
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலா. இவர் அருகே உள்ள வட குரும்பூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அமலா ஏலச்சீ்ட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இறையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமானோர் உறுப்பினராக சேர்ந்தனர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த இசையாஸ் என்பவருக்கு சீட்டு பணம் ரூ.39 லட்சத்தை அமலா திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கைது
இதுகுறித்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இசையாசுக்கு பணத்தை திருப்பி தராமல் அமலா ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏலச்சீ்ட்டு நடத்தி ரூ.39 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட் சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.