வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
x

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குளச்சல் பாலப்பள்ளம் சரணங்காட்டை சேர்ந்தவர் மனுவேல் (வயது 50). இவர் நேற்று தன் உறவினர்களோடு நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

என் மகன் சேம் ஜோயல் (29) இளங்கலை பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் மூலமாக 2 பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாக என் மகனிடம் கூறினர். பணம் கொடுத்தால் அந்த வேலையை என் மகனுக்கு பெற்று தருவதாகவும் கூறினர். இதை நம்பி ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் பல தவணைகளாக கொடுத்தேன். ஆனால் என் மகனை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பாமல் மலேசியாவில் 10 நாட்கள் தங்க வைத்துள்ளனர். அங்கு உணவு வழங்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். எனவே சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story