மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி; புதுக்கோட்டை வாலிபர் மீது வழக்கு


மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி; புதுக்கோட்டை வாலிபர் மீது வழக்கு
x

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் புதுக்கோட்டை வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

காதல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரை சேர்ந்தவர் வாசு. இவருடைய மகன் பொன்மணிகண்டன். இவர் மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது மலேசியாவை சேர்ந்த ரேணுகோபாலின் மகள் மகேஸ்வரி (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், பொன்மணிகண்டன் மகேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ.40 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய பொன்மணிகண்டன் மகேஸ்வரியுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

5 பேர் மீது வழக்கு

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி மலேசியாவில் இருந்து பொன்மணிகண்டன் வீட்டிற்கு கடந்த 1-ந் தேதி சென்று திருமணம் குறித்தும், தான் கொடுத்த பணத்தை பற்றியும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்மணிகண்டன், அவரது தந்தை வாசு, தாயார் ரஜினி, அண்ணன் ரஞ்சித்குமார், சகோதரி பிரியா ஆகியோர் மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாள் மற்றும் கம்பால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி பொன்மணிகண்டன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story