நகைச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி


நகைச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி
x

விருதுநகரில் நகைச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகரில் நகைச்சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைச்சீட்டு

விருதுநகர் கச்சேரி ரோட்டில் பாவாலியை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 42) என்பவரின் பெயரில் உரிமம் பெற்று நகைக்கடை நடத்தப்பட்டது. இந்த நகைக்கடை உரிமையாளர்களாக பாலாஜி வரதராஜன், விருதுநகர் ஏ.டி.பி. காம்பவுண்டை சேர்ந்த சுப்பிரமணியன், அவரது மனைவி முத்துமாரி (40), மருமகன் பால விக்னேஷ் மற்றும் சிலர் இருந்தனர்.

இந்தநிலையில் கார்த்திகேயன் என்பவர் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவர் சூலக்கரையை சேர்ந்த வியாபாரி கருப்பசாமி (36) என்பவருக்கு இந்த நகைக்கடையை அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கருப்பசாமி, தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நகைக்கடையில் மாத ரூ.10 ஆயிரம் நகைச் சீட்டு தவணை கட்டிவந்தார். நகை கடை உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் கடந்த நவம்பர் மாதம் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

தவணைத்தொகை

இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் நகைக்கடைக்கு தவணைத்தொகை கட்ட சென்ற கருப்பசாமியிடம் அங்கிருந்த உரிமையாளர் களில் ஒருவரான பாலாஜி வரதராஜன் கடையில் கணக்கு தணிக்கை நடப்பதாகவும், அடுத்த மாதம் கட்டிக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்து நகைக்கடை பூட்டியிருந்தது. மேலும் இவர்கள் நடத்திய மதுரை நிதி நிறுவனமும் பூட்டப்பட்டதாக கருப்பசாமிக்கு தெரிய வந்தது. இந்தநிலையில் உரிமையாளர்கள் அனைவரும் தலைமறைவானதும் தெரியவந்தது. கருப்பசாமி மற்றும் உறவினர்கள் ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் நகைச்சீட்டுதவணைத்தொகை கட்டி இருந்தனர்.

2 பேர் கைது

மேலும் அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான்.ரூ 40 லட்சம் கட்டியிருந்தார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோடிரூபாய்க்கு மேல் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

இதைனயடுத்து முத்துமாரி, பவுன்ராஜை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story