ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5¾ லட்சம் மோசடி -போலீசார் விசாரணை


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின்  வங்கி கணக்கில் இருந்து ரூ.5¾ லட்சம் மோசடி  -போலீசார் விசாரணை
x

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் சுந்தர் நகரை சேர்ந்தவர் சீதாராமன் (வயது 61). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மகன் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டு மாடியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சந்தோஷ் (32) என்பவர் குடியிருந்து வருகிறார். சீதாராமன் தனது ஓய்வூதிய பலனை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

சீதாராமன் வயது முதிர்வின் காரணமாக தற்போது வீட்டிலிருந்து வெளியே செல்வதில்லை. இதனால் சீதாராமனுக்கு பணம் தேவைப்படும்போது மாடியில் குடியிருக்கும் சந்தோஷ், வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து கொடுத்து உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்தநிலையில் சீதாராமன் வங்கி கணக்கிலிருந்து கடந்த 6 மாதங்களாக ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் வரை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீதாராமன் திருமங்கலம் வங்கியில் ரூ.5 லட்சம் எடுப்பதற்கு செக் கொடுத்துள்ளார். அப்போது அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாராமன் இதுகுறித்து சந்தோஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினாராம்.

இது தொடர்பாக சீதாராமன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்திடம் நேரில் சென்று புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்தோஷை தேடி வருகின்றனர்.


Next Story