போலி பணி நியமன ஆணை கொடுத்து 4 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி


போலி பணி நியமன ஆணை கொடுத்து 4 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலி பணி நியமன ஆணை கொடுத்து 4 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி

கடலூர்

கடலூர்:

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் மகள் ஷீலா, வீரபாண்டியன் மனைவி பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் யோகா தெரபி மற்றும் மசாஜ் தெரபி படித்துள்ளோம். எங்களிடம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு அதிகாரிகள் பலரை நன்கு தெரியும் என்றும், உங்களுக்கு என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பிய நாங்கள் அவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் சுமார் ரூ.8 லட்சம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், சில நாட்களில் எங்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார். அதன் மூலம் நாங்கள் என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் பணியில் சேர்ந்தோம்.

3 மாதங்கள் வேலை பார்த்த நிலையில், நாங்கள் கொடுத்தது போலி பணி நியமன ஆணை என்று கூறி, எங்களை வேலைக்கு வர வேண்டாம் என கூறிவிட்டனர். இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று போலி பணி நியமன ஆணை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். ஆகவே எங்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story