மரக்காணம் அருகேவாலிபரிடம் நூதன முறையில் ரூ.9.40 லட்சம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


மரக்காணம் அருகேவாலிபரிடம் நூதன முறையில் ரூ.9.40 லட்சம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் வாலிபரிடம் நூதன முறையில் ரூ.9.40 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்டன் வினோத் (வயது 30). இவருக்கு கடந்த மார்ச் 25-ந் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கும், டெலிகிராம் ஐ.டி. மூலமும் பகுதி நேர வேலை என்ற பெயரில் சிறிய முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், அதற்கு டாஸ்க் முடிக்க வேண்டும் என்றுகூறி மர்ம நபர்கள் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதோடு அவர்கள் ஒரு லிங்கையும் அனுப்பியிருந்தனர்.

இதை உண்மையென நம்பிய செல்டன்வினோத், அந்த லிங்கிற்குள் சென்று பாஸ்வேர்டு கொடுத்து ஐ.டி.யை பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது முதலில் ரூ.1,000 செலுத்தி டாஸ்க் முடித்து ரூ.1,200 பெற்றுள்ளார். பின்னர் ரூ.3 ஆயிரம் செலுத்தி ரூ.4,200 பெற்றுள்ளார். தொடர்ந்து அவர்கள் கூறியவாறு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் 25 தவணைகளாக மொத்தம் ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்து 200 அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு டாஸ்கை முடித்த பிறகும் செல்டன் வினோத்துக்கு பணத்தை அனுப்பவில்லை. பின்னர்தான் நூதன முறையில் பணமோசடி செய்தது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செல்டன் வினோத், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story