30 டன் சர்க்கரை தருவதாக கூறி ஓமலூர் வியாபாரியிடம் ரூ.9.38 லட்சம் மோசடி


30 டன் சர்க்கரை தருவதாக கூறி ஓமலூர் வியாபாரியிடம் ரூ.9.38 லட்சம் மோசடி
x

30 டன் சர்க்கரை தருவதாக கூறி ஓமலூர் வியாபாரியிடம் ரூ.9.38 லட்சம் மோசடி செய்த நிறுவனத்தினர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 21). சர்க்கரை வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் 25 டன் சர்க்கரை வாங்குவதற்காக ரூ.7 லட்சத்து 79 ஆயிரத்து 625 அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் 20 டன் சர்க்கரை மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மீதமுள்ள 5 டன் சர்க்கரையுடன் சேர்த்து 30 டன் சர்க்கரை அனுப்புவதாக கூறி மொத்தம் ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 230-ஐ பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மோசடி செய்துவிட்டனர். பணம் முழுவதும் ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சர்க்கரை வியாபாரி மோகன்குமார் புகார் செய்தார். அதன்பேரில், இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story