ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் மோசடி


ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் மோசடி
x

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் மோசடி

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள வங்கியின் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு ஜெயங்கொண்ட நிலை பகுதியை சேர்ந்த கனகரத்தினம் மனைவி ஜோதி (வயது 50) என்பவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு பணம் எடுத்து தருவதாக அங்கு இருந்த 2 வாலிபர்கள் கூறினர். இதையடுத்து ஜோதியின் ஏ.டி.எம். கார்டை மாற்றி பணம் இல்லை என்று அந்த பெண்ணை ஏமாற்றி அனுப்பி வைத்து விட்டனர். பின்னர் அந்த பெண் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஜோதியின் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்தனர். அப்போது ஜோதியின் செல்போனுக்கு பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோதி உடனடியாக சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story