எனது புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி மக்கள் நம்பவேண்டாம் என்று கலெக்டர் வேண்டுகோள்


எனது புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி  மக்கள் நம்பவேண்டாம் என்று கலெக்டர் வேண்டுகோள்
x

சமூக வலைத்தளங்கள் மூலமாக எனது புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதை மக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தவறான தகவல்களை தெரிவித்து சிலர் பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. இதுபோன்ற நபர்கள் செல்போனின் மூலமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் மூலமாகவும் எந்த தகவல்களை தெரிவித்தாலும் யாரும் நம்ப வேண்டாம். மேலும் இதுபோன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக காவல்துறையில் அந்த நபர் மீது புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story