தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி


தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியாக தகவல்கள் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் செந்தில்ராஜ். இவரது புகைப்படம் மற்றும் பெயரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி உள்ளார். அதனை வைத்து அந்த மர்ம ஆசாமி பணம் கேட்டு வாட்ஸ்அப்பில் தகவல்கள் அனுப்பியதாக தெரியவந்து உள்ளது. அந்த ஆசாமி போலீஸ் அதிகாரி ஒருவருக்கும், கலெக்டர் அனுப்பியது போன்று தகவல் அனுப்பி உள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரியவந்தது. அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

புகார்

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, எனது புகைப்படத்தை மோசடியாக ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி வருகிறார். அதன் மூலம் மோசடியாக பணம் கேட்டு பலருக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக தெரிகிறது. இதனால் யாரும் ஏமாற வேண்டாம். அது போன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளியுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story