த.மு.மு.க.வுக்கு இலவச ஆம்புலன்ஸ்


த.மு.மு.க.வுக்கு இலவச ஆம்புலன்ஸ்
x

த.மு.மு.க.வுக்கு இலவச ஆம்புலன்ஸ் அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், த.மு.மு.க.வினர், கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனைத்து சமுதாயத்தினருக்கும் பாரபட்சமின்றி த.மு.மு.க.வினர் உதவி செய்தனர்.

இந்த சேவையை பாராட்டும் வகையில், நேற்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, விஸ்வாஸ் அமைப்பின் தலைவர் கமலா காந்தி, டாக்டர் விவேக், டாக்டர் ஷில்பா விவேக் ஆகியோர் தங்களது குடும்பத்தின் சார்பில் ஜி.கே.எஜுகேஷன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஆம்புலன்சை இலவசமாக வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரமேஷ் பிரசாத், மனிதநேய மக்கள் கட்சி இம்ரான், த.மு.மு.க. மருத்துவ அணி மாவட்ட தலைவர் முகமது அலி, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story