சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச ஆம்புலன்ஸ்; அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு நிரந்தரமாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மா.செல்லத்துரை தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன், சிவகிரி நகர செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், விவசாய அணி மனோகரன், பூசைப்பாண்டியன், சித்த மருத்துவ மருந்தாளுனர் தனகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story