328 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


328 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

328 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திக் தலைமை தாங்கினார். சண்முகம் எம்.பி., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி.அய்யராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வக்கீல் டி.பி.டி.துளசி அய்யா வரவேற்றார். விழாவில் 328 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழக பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. வழங்கி பேசினார். இதில் பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணை தலைவர் அழகேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவநீதம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பவானி பழனி, பேரூராட்சி செயல் அதிகாரி ராஜசேகர் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Next Story