600 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


600 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x

600 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருப்பத்தூர்

ஜவ்வாது மலை நெல்லிவாசல், புதூர்நாடு வனத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் கே.சந்திரகுமார், கே.ஆறுமுகம் ஆகியோர் வரவேற்றனர். வனச்சரக அலுவலர்கள் எம்.பிரபு, ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 600 மலைவாழ் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் ஆர்.ராஜ்குமார், மின்சார வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அலமேலு செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிருந்தாவதி வைகுந்தராவ், துக்கன், கூட்டுறவு சங்க தலைவர் சின்னப்பையன் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜி.சதாசிவம், டி.வாசுதேவன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.


Next Story