பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் மற்றும் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விளாத்திகுளம் பள்ளியில் 294 மாணவர்களுக்கும், சிவஞானபுரம் பள்ளியில் 95 மாணவர்களுக்கும் என 389 பேருக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, விளாத்திகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் சாந்தி, சிவஞானபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, வார்டு செயலாளர்கள் ஜெயசங்கர், ஸ்டாலின் கென்னடி, வார்டு கவுன்சிலர் குறிஞ்சி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.