மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நகர் மன்ற தலைவர் தாஹிரா அம்மாள் தலைமை தாங்கினார்‌. ஆணையர் குமார், துணைத்தலைவர் ராம.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணா வரவேற்றார். விழாவில் அண்ணாத்துரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் நகராட்சி உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story