மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மாதாபட்டணம் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

மாதாபட்டணம் ச.ச.வி.மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை அமிர்தசிபியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட செயலாளரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான சிவபத்மநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செல்லம்மாள், துணைத் தலைவர் மகேஷ் மாயவன், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story