உலமாக்களுக்கு இலவச சைக்கிள்


உலமாக்களுக்கு இலவச சைக்கிள்
x

உலமாக்களுக்கு இலவச சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.

வேலூர்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், 488 ஆண்கள், 98 பெண்கள் என மொத்தம் 586 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.30 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.


Next Story