அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசசைக்கிள்கள்


அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசசைக்கிள்கள்
x

பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை நந்தகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் சார்பில் சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், துணை தலைவர் ஜீவசத்தியராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அருள்நாதன், துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 142 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், பேரூர் தி.மு.க. செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல்ஊசூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி, மாவட்ட கவுன்சிலர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். இதில் நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சைக்கிள்கள் வழங்கி பேசினார்.

மேலும் கணியம்பாடியை அடுத்த சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 116 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, ஒன்றிய கவுன்சிலர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story