34 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை
திருவாரூர் மாவட்டத்தில் 34 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட உள்ளது என அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராஜாசேகரன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் 34 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட உள்ளது என அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராஜாசேகரன் தெரிவித்தார்.
இலவச பஸ் பயண அட்டை
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எளிதாக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக திருவாரூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும் பணி தொடங்கியது.
அதன்படி திருவாரூர் ஆர்.சி. பாத்திமா அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளில் நடந்த நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக திருவாரூர் கோட்ட மேலாளர் ராஜசேகரன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையை வழங்கினார்.
34,181 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது
அப்போது அவர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 89 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34,181 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட உள்ளது என்றார்.
விழாவில் திருவாரூர் கிளை மேலாளர் அசோகன், பள்ளியின் தாளாளர் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து