ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வண்டிகள்-நகர்மன்ற தலைவர் வழங்கினார்.


ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வண்டிகள்-நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வண்டிகளை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக வண்டிகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தலைமை தாங்கி சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வண்டிகளை வழங்கினார். இதுகுறித்து காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை கூறுகையில், காரைக்குடியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை தரத்தினையும், அவர்களின் வியாபாரத்தினையும் மேம்படுத்தும் வகையில் ரூ.48.10 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள் பெற்றவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 70 வண்டிகள் வழங்கப்படுகிறது. பழம், காய்கறிகள் வியாபாரம் செய்பவர்களுக்கு 25 வண்டிகளும், சிற்றுண்டி கடை நடத்துபவர்களுக்கு 25 வண்டிகளும், பூ வியாபாரம் செய்பவர்களுக்கு 20 வண்டிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக தற்போது 27 நபர்களுக்கு இலவச வண்டிகள் வழங்கப்பட்டன. இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் நிலையில் மேலும் பல்வேறு பயனாளிகள் பயன்பெற வாய்ப்புள்ளது. சாலையோர வியாபாரிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆணையாளர் லெட்சுமணன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகரமைப்பு அலுவலர் மாலதி, நகராட்சி என்ஜினீயர் கோவிந்தராஜன், உதவி என்ஜினீயர் சீமா, நகர்மன்ற உறுப்பினர்கள் மெய்யர், கண்ணன், சித்திக், அன்னை மைக்கேல், தெய்வானை இளமாறன், கலா காசிநாதன் உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story