இந்திய குடியுரிமை தேர்வுக்கான இலவச பயிற்சி மையம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய குடியுரிமை தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை புதுச்சேரி துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய குடியுரிமை தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை புதுச்சேரி துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.
பயிற்சி மையம் திறப்பு விழா
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய குடியுரிமை தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு புதுச்சேரி மாநில சட்டசபை துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு சிறப்பு மைத்தினை திறந்து வைத்தார்.
விழாவில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலை வகித்து கூறுகையில், மத்திய பல்கலைக்கழகம் கல்வியில் மட்டுமின்றி சமுதாய பணிகளில் அர்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய குடியுரிமை தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
இந்த மையத்தினை மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் சிறப்பு மைய முதன்மை அலுவலர் பேராசிரியர் செல்வம், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன், நிதி அதிகாரி பழனி, ஊடகத்துறை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைப்பேராசிரியை ராதா நன்றி கூறினார்.