போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு


போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது மாணவர்கள் தனி ஒழுக்கத்தை கடைபிடித்து ஆளும் தகுதியை பெற வேண்டும். இந்த இலவச பயிற்சி வகுப்புகளை சிறப்பான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கி பேசினார். பதிவாளர் விஜயராகவன் வரவேற்றார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர் சதீஷ், திருவள்ளுவர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பி.கதிரேசன், ஜி.யோகானந்தம் ஆகியோரும் பேசினர். இலவச பயிற்சி வகுப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நன்றி உரையாற்றினார்.


Next Story