விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு28-ந் தேதி தொடங்குகிறது


விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு28-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 28-ந் தேதி தொடங்குகிறது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு விழுப்பரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

பதிவு செய்யலாம்

இப்பயிற்சி வகுப்பானது, ஏற்கனவே போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 9080515682 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story