போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் மத்திய அரசு பணிகளில் சேர்ந்து பணியாற்ற வசதியாக எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். ஆகிய போட்டி தேர்வில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பு நேற்று காலை சிவகாசி அரசு கல்லூரியில் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை கல்லூரியின் முதல்வர் தாமோதிரன் தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். இந்த பயிற்சி வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மொத்தம் 100 நாட்கள் இந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி செய்திருந்தார்.
Related Tags :
Next Story