தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி


தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி
x

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் 11,409 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-தேதி ஆகும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்குமேல் கல்வித்தகுதி உடைய மனுதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 27 வரை.

இதைெயாட்டி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் மத்திய அரசு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இதில், தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். எனவே போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story