விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வு மூலம் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஆண்ட்ரியூஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் பாரதிதாசன், மணிகண்டன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வேல்முருகன், லாவண்யா, கலாவதி, உதவியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.