இலவச கணினி பயிற்சி முகாம்


இலவச கணினி பயிற்சி முகாம்
x

இலவச கணினி பயிற்சி முகாம்

தஞ்சாவூர்

திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் ஊராட்சியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம டிஜிட்டல் சக்ரா அபியான் திட்டத்தின் கீழ் இலவச கணினி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமினை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் தொடங்கி வைத்தார். முகாமில் டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம், டிஜிட்டல் சாதனங்களை இயக்குதல் இன்டர்நெட் அறிமுகம், இன்டர்நெட்டை பயன்படுத்தி தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் 10 வயது முதல் 60 வயது வரையிலான கிராமப்புற பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயன்பெறலாம். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story