1,261 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


1,261 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x

1,261 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

திருப்பூர்

உடுமலை,

உடுமலையில் மாணவிகள் 1,261 பேருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இலவச சைக்கிள்

உடுமலை யில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா 2 பள்ளிகளில் நடந்தது. உடுமலை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். உடுமலை மாவட்ட கல்வி அதிகாரி கு.பழனிச்சாமி வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 383 பேர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 181 பேர், பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர் என 594 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்திற்கு 17ஆயிரத்து 780 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் இப்போது புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தில் 6-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு தொடங்கும் நேரத்தில் மாதம் ரூ.1,000 வழங்கும்திட்டத்தை கொண்டு வந்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். .நுழைவுத்தேர்வில் தோல்வியுற்றால் மனச்சோர்வு அடையக்கூடாது. அடுத்ததேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்.இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். பள்ளி தலைமையாசிரியை டி.பூரணி நன்றி கூறினார்.

விசாலாட்சி மகளிர் பள்ளி

இதேபோன்று ஸ்ரீ விசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவிகள்356 பேர், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 241 பேர், ராஜேந்திரா சாலைஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்70பேர் என மொத்தம்667பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.



Next Story