பள்ளி மாவை, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
பள்ளி மாவை, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
அவினாசி
பரீட்சையில் பெயிலாகிவிட்டால் விபரீத முடிவு வேண்டாம் என்று பள்ளி விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளி மாவை, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அவனா சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை 5.30 மணியளவில நடந்தது.
நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு விழா சிறப்புரையாற்றி மாணவ/மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்
சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியை தருகிறது. எரிபொருள் தேவையில்லை.சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது. மேலும் பள்ளிக்கு விரைந்து வருவதற்கு சைக்கிள் உதவிகரமாக இருக்கிறது இதுபோன்ற பல்வேறு நன்மை தருகிறதுஎனவே முறையாக சைக்கிளை அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன் வருகிற 15 ஆம் தேதி யன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரை அருகில் காலை சிற்றுண்டியை தொடங்கி வைக்கிறார் அதன் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அது விரிவாக்கம் செய்யப்படும்.தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருள் தடுப்பு கையில் எடுத்துள்ளார்.கல்லூரி பள்ளி அருகில் தான் இது அதிகம் நடமாட்டம் உள்ளதுஇதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது எனவே அதை தடுக்க உடனடியாக 10 98 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தலாம்.மேலும் பரீட்சையில் பெயிலாகி விட்டோமே என்று மனம் தளரக்கூடாது அது தேவையற்ற ஒன்று அதிலும் குறிப்பாக மாணவிகளை கேட்டுக்கொள்கிறேன் பரீட்சையில் பெயிலாகி விட்டோம் என்று விபரீத முடிவு தேவையற்றது எனவே அது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்றுதகப்பன் ஸ்தானத்திலிருந்து வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.