இலவச கண் பரிசோதனை முகாம்
இலவச கண் பரிேசாதனை முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொங்கன்குளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தியது. எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் அமர்ணா, பீரித்தி ஆகியோர் 105 பேருக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை அமைப்பாளர் மாதவன், விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி கொங்கன் குளம் பாலாஜி, முத்துச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், வெம்பக்கோட்டை வட்டார முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கரிசல்குளம் ம.தி.மு.க. கிளை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கொங்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், தொழிலதிபரும் ஆலங்குளம் கம்மாவார் நாயுடு வர்த்தக சங்க தலைவருமான சவுந்தராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.