இலவச கண் சிகிச்சை முகாம்
களக்காட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
களக்காடு கோவில்பத்து சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து களக்காடு நகராட்சி பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story