இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம்
தாயில்பட்டி,
ஜுடா இன்டர்நேஷனல் பவுண்டேஷன், சிவகாசி மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் கோவிந்தன் தலைமை தாங்கினார். சங்கரா கண் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் மற்றும் ஜுடா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் நிறுவனர்கள் சீத்தாராம், பூபதி, பரணி, ஹேமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வெம்பக்கோட்டை சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர். தூரப்பார்வை, கிட்ட பார்வை, கண்ணில் சீழ் வடிதல், மாலைக்கண் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் கண் தொடர்பான பிரச்சினைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இலவச அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 நபர்கள் சங்கரா கண் மருத்துவமனைக்கு, ஜுடா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் உதவியோடு அழைத்துச் செல்லப்பட்டனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திலகராஜ் நன்றி கூறினார்.