இலவச கண் சிகிச்சை முகாம்
எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ளஎளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடக்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் பங்கேற்ற 222 பேரில், 24 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வாகினர். கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்களில் 6 பேருக்கு அதிகமான சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளதால், ஆலோசனைகள் வழங்கி சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. 5 பேர் இதர காரணங்களால் அறுவை சிகிச்சைக்கு வரவில்லை. எஞ்சியுள்ள 13 பேர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story