சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்


சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

நீலகிரி

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சேரம்பாடி அரசுஆரம்பசுகாதாரநிலையம் ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் நடத்தின. முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையசெயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் மற்றும் நாசர் அஜித்ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீமதி முகாமினை தொடங்கி வைத்தார். ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவகுழுவினர் அந்தோனியம்மாள் தலைமையில் கண் நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். 25 பேர் கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறிந்து ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.


Next Story