இலவச பொது மருத்துவம்-கண் சிகிச்சை முகாம்


இலவச பொது மருத்துவம்-கண் சிகிச்சை முகாம்
x

இலவச பொது மருத்துவம்-கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி தாலுகா காரையூர் சமுதாய கூடத்தில் தேனிமலை ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம், பொன்னமராவதி மீனாட்சி பெரியண்ணன் பல்நோக்கு மருத்துவமனை, காரைக்குடி காணல் கண் மருத்துவமனை, வலையப்பட்டி காணல் ஆரஞ்சு விசன் சென்டர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு தேனிமலை ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமத்தின் சேர்மன் சுப்புராஜ் தலைமை தாங்கினார். முகாமில் மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனையின் அறங்காவலர் சேதுராமன், கல்லூரியின் துணை சேர்மன் சுந்தர்ராஜ், நிர்வாக இயக்குனர் திவ்யா சுந்தர்ராஜ், காரைக்குடி காணல் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மீனாட்சி பெரியண்ணன் பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர்கள் விக்னேஸ்வரன், லத்திகா, மருத்துவமனையின் மேலாளர் சங்கர், வலையப்பட்டி காணல் ஆரஞ்சு விசன் சென்டரின் கண்பார்வை மருத்துவர்கள் ஷாம், நந்தினி ஆகியோர் பொதுமக்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவம் என அனைத்து பரிசோதனைகளும் செய்தனர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியின் முதல்வர்கள், விரிவுரையாளர்கள், மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனையின் சுகாதார செவிலியர்கள், வலையபட்டி காணல் ஆரஞ்சு விசன் சென்டர் அலுவலக உதவியாளர்கள் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.


Next Story