ரெட்கிராஸ் சங்கம் சார்பில் இலவச ஓமியோபதி மருத்துவ முகாம்
காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் இலவச ஓமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.
காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் இலவச ஓமியோபதி மருத்துவ முகாம்இலவச ஓமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.
காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், லிவிங் ஹெல்த்தி ஓமியோ கிளினிக் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச ஓமியோபதி மருத்துவ முகாமை காட்பாடியில் நேற்று நடத்தின.
முகாமிற்கு ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் மேஷாக் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். டாக்டர் ஜெக்கோ எஸ்பா வரவேற்றார்.
இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், மருத்துவக் குழு தலைவர் வீ.தீனபந்து, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் எம்.யாழினி மெல்வி, ஆர்.பாலாஜி, எம்.ஜெக்கோ எஸ்பா ஆகியோர் ஆஸ்துமா, அலர்ஜி, இருமல், காய்ச்சல், தைராய்டு பிரச்சினை, மூட்டு வலி, கை-கால் வலி, சரும வியாதி, வயிறு பிரச்சினை, காது வலி, சர்க்கரை நோய், சிறுநீரக கற்கள், ரத்த அழுத்தம், கண் தொற்று மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் 15 நாட்களுக்கான மருந்துகளை மருந்தாளுனர்கள் கே.சேகர், எஸ்.சிரஞ்சீவி ஆகியோர் இலவசமாக வழங்கினர்.