சீவூர் ஊராட்சியில் 42 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
சீவூர் ஊராட்சியில் 42 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் லலிதா வரவேற்றார். குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் கலந்து கொண்டு 42 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் உஷா, குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், சி.என்.பாபு உள்பட வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.