பார்வையற்ற 5 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
பார்வையற்ற 5 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வழங்கினார்.
வேலூர்
காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அரசு சார்பில் வழங்கப்படும் பட்டாக்கள், சான்றிதழ்கள், பட்ட இடமாற்றம், நில அளவை துறையில் செய்யப்படும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த பதிவேடுகளை பார்வையிட்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அம்முண்டி கிராமத்தில், வேலூர் காட்பாடியில் வசித்து வந்த பார்வையற்ற 5 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
அப்போது தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் சாதிக் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story