திருச்செந்தூர் பி.ஜி.ஆஸ்பத்திரியில்இலவச மருத்துவ முகாம்
திருச்செந்தூர் பி.ஜி.ஆஸ்பத்திரியில்இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பி.ஜி. ஆஸ்பத்திரியில் நுரையீரல் மற்றும் சிறுநீரகவியல் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் நுரையீரல் நோய் சிறப்பு டாக்டர் எம்.விஸ்வநாதன் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தார். இதில், ஆஸ்துமா, அலர்ஜி, எக்ஸ்ரே, பி.எப்.டி. மற்றும் நுரையீரல் நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்து, ஆலோசனைகள் வழஙகப்பட்டது. அதேபோல், சிறுநீரக நோய் சிறப்பு டாக்டர் ஜெ.ஜெயநிவாஸ் கலந்து கொண்டு சிறுநீரக நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். மேலும், ரத்தம், சிறுநீர் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டது. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் நுரையீரல் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை, பி.ஜி. ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் ராமமூர்த்தி தலைமையில், டாக்டர்கள் குகன் ராமமூர்த்தி, ருக்மணி, மலர்விழி குகன் ஆகியோர் செய்திருந்தனர்.