மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்;நாளை மறுநாள் நடக்கிறது
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளில் பார்வை குறைவுடையோர், செவித்திறன் குறைவுடையோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் உடல் இயக்க குறைபாடு உள்ளோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவ குழுவினர் மூலம் குறைகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவ தேசிய அடையாள அட்டை, இலவச ெரயில் மற்றும் பஸ் சலுகை, உதவி உபகரணங்கள், மனநலம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அறுவை சிகிச்சை பதிவு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.