மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
x

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

பரிசோதனைக்கு பின்னர் 28 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்களை சிறப்பு முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, தாசில்தார் சம்பத், மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, ஆலங்காயம் பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசன், துணைத் தலைவர் ஸ்ரீதர், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உள்ளனர்.


Next Story