வடகாட்டில் இலவச மருத்துவ முகாம்
வடகாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மல்லிகை புஞ்சை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஏ.செல்லத்துரையின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் மலையப்பட்டியில் உள்ள கல்வி, மருத்துவம் மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெயராஜசேகர் தலைமை தாங்கினார். டாக்டர் துரையரசன் உள்ளிட்ட மருத்துவர்கள், முகாமில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அதில், தேவையானோருக்கு மருந்து, மாத்திரைகளையும் வழங்கப்பட்டது. முகாமில், இ.சி.ஜி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனையும் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story