எண்ணை கிராமத்தில் 28-ந் தேதி இலவச மருத்துவ முகாம்


எண்ணை கிராமத்தில் 28-ந் தேதி இலவச மருத்துவ முகாம்
x

எண்ணை கிராமத்தில் 28-ந் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, 'கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்' மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் 39 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 27 முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது 28-வது இலவச மருத்துவ முகாம் அன்னவாசல் வட்டாரத்தில் உள்ள எண்ணை கிராமத்தில் வருகிற 28-ந் தேதி சாமி மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, இதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்தா மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story