கீழ்ப்பனையூரில் இன்று இலவச மருத்துவ முகாம்


கீழ்ப்பனையூரில் இன்று இலவச மருத்துவ முகாம்
x

கீழ்ப்பனையூரில் இன்று (புதன்கிழமை) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

அரிமளம் வட்டாரத்தில், கீழ்ப்பனையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியல் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் இன்று (புதன்கிழமை) இலவச மருத்துவ முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, இதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்தா மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story