இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்


இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்
x

இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.

வேலூர்

காட்பாடி

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சி.டி. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.சங்கர் தலைமை தாங்கி நோயாளிகளை பரிசோதனை செய்து முகாமை தொடங்கி வைத்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

முகாமில் டாக்டர்கள் குணசேகர், லதாலட்சுமி, சீனிவாசன், சோனியா, கரண்சங்கர் ஆகியோர் நோயாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

இலவசமாக அறுவை சிகிச்சை ஆலோசனை, மகளிருக்கான மருத்துவ ஆலோசனை, டயாலிசிஸ் சிகிச்சை ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், அதில் அல்லாதவர்கள் சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சிறுநீரக கோளாறுகள் மற்றும் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சை, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், முதுகு தண்டுவட சிகிச்சை ஆகியவற்றுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாமில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சித்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் நோயாளிகள் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.


Related Tags :
Next Story