இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கல் அரசு பள்ளியில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி. பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் முழு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மருத்துவ நிபுணர்களால் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story