இலவச கண் மருத்துவ முகாம்
நத்தம் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொடங்கி வைத்தார்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், விருதுநகர் கிருஷ்ணன் கோவில் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சார்பில், நத்தம் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் இலவசமாக 272 பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. 55 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னா கவுண்டர், பார்வதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், நகர் அவை தலைவர் சேக் ஒலி, பொருளாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆண்டிச்சாமி, கண்ணன், பாருக் முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொடங்கி வைத்தார். இதில் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்பாபு, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.