விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
x

ஏலகிரி மலையில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று தோட்டக்கலை துறை சார்பில் ஏலகிரி மலை விவசாயிகளுக்கு 8 வகையான இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு எலுமிச்சை, பப்பாளி, நெல்லி, நாவல் உள்ளிட்ட 8 வகையான மர கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

இதில் தோட்டக்கலை துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Next Story